வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா!(படங்கள்)

dsc08898வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 வெள்ளிகிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி பக்தர்கள் பாற்குட பவனியாக வந்து அந்த பாலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டு மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பதரை மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.

தொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்.

அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

-பிரதேச நிகழ்வுகளுடன் கஜன்dsc08691 dsc08697 dsc08717 dsc08747 dsc08764 dsc08810 dsc08855 dsc08882 dsc08897

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com