வவுனியாவில் 500 இற்கும் அதிகமான ரவைகள் கண்டெடுப்பு!

வவுனியா, கல்நட்டன்குளம் பிரதேசத்தில் சுற்றுலாப் பகுதி இடமொன்றில் இருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை துப்பாக்கி ரவைகள்  இன்று கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தை மறுசீரமைக்கும் குழுவினர் இந்த வெடிபொருட்களை கண்டு, பொலிஸருக்கு தகவல் வழங்கியதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

எம்.பி.எம்.ஜீ வகையை சேர்ந்த சுமார் 500 தோட்டாக்கள் குறித்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் செயலிழக்கச் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் கூறினார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com