சற்று முன்
Home / செய்திகள் / வவுனியாவில் விபத்து – ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

வவுனியாவில் விபத்து – ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் நொச்சியாகம பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான அதேவேளை நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் வவுனியாவிலிருந்து விமான நிலையம் சென்றுவிட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த KDH ரக வாகனம் நொச்சியாகம பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலம் ஒன்றில் மோதி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் கோவிலடியை சேர்ந்த 23 வயதுடைய விஜயகுமார் தனுசன் என்ற இளைஞன் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இறந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் விபத்து தொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com