வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

வவுனியாவில் பொலிஸார் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக முதியவரொருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதில், முறைப்பாடொன்றினை பதிவு செய்யச் சென்ற போது 3 தினங்கள் அலைக்களித்ததுடன், முறைப்பாட்டினையும் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாட்டினை மேற்கொண்ட குறித்த 70 வயது முதியவரது, மருமகன் முறையான உறவினரொருவர் தனது இரண்டு பிள்ளைகள், மனைவி, மாமியார் ஆகியோரை கடந்த 04.07.2017 தனது வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தொடர்பில் தெரியாத நிலையில் அவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைபாடொன்றை பதிவு செய்வதற்காக சென்றுள்ளார்.

இருப்பினும், அவரது முறைப்பாட்டினை செட்டிகுளம் பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனது உறவு முறையான மருமகன் பொலிஸாரை தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதையடுத்தே பொலிஸார் தனது முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com