வவுனியாவில் ஆக்கிரமிக்கப்ட்டிருந்த வீதி 30 வருடங்களின் பின் மீட்பு!

வவுனியாவில் 30 வருடங்களாக படையினரால் ஆக்கிரமிக்கப்ட்டிருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் அவ்வையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட வீதி கிராம மக்களின் முயற்சியால் நேற்று (31-07) புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன் மற்றும் வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றிச் செல்லவேண்டிய நிலைமை காணப்பட்டதுடன் மரணமானவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதிலும் தெற்கிலுப்பைக்குளம் மற்றும் கோவில்குளம் கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com