வவுனியாவில் அமையப்போகும் புதிய பொருளாதார வலயமும் வடபகுதிக்கான மீன்பிடித்துறைமுகமும் பற்றிய ஒரு பார்வை பேராசிரியர் – பசுபதி சிவநாதன்

SL-Nothern-Provienceஇலங்கை அரசாங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன் மொழிவுகளில் வடமாகாணத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்றவகையில் குறிப்பிடப்பட்டவற்றில் முக்கியமானதொன்றாக இருப்பது 1. வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை நிறுவுவதற்கு 200 மில்லியன் செலவிட மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. 2. காரைநகரிலும் வல்வெட்டித்துறையிலும் மீன்பிடித்துறைமுகங்ளை கட்டிஎழுப்புதல் இவ்இரண்டு திட்டங்களும் பிரதேசஅபிவிருத்திச் செயற்பாட்டின் ஒருகூறாகக் கௌ்ளமுடியும். போருக்குப்பின்னரான போர்நடைபெற்ற பிரதேசத்தின் பொருளாதார செயற்பாட்டில் இவை எந்தளவு முக்கித்துவமுடையது என்பதை தற்போதைய நிலையையும் எதிர்கால நிலையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குவது பொருத்தமுடையது எந்தவெரு பொருளாதாரசெயற்பாடும் மக்கள் நலவாழ்வோடும் நிலைத்து நிற்கும் பிரதேச பொருளாதார அபிவிருத்தியோடும் இணைந்துசெல்லக்கூடியதாக இருப்பதே வினைத்திறனான பொருளாதார செயற்பாடாக இருக்கும்.
வவுனியாவிற்கென பரிந்துரைக்கப்பட்ட புதிய பொருளாதாரவலயம் எங்கு அமைக்கப்படவேண்டும் என்பதற்கான தீர்மானத்தை எடுக்கும்போது பிரதேச பொருளாதார மேம்பாட்டை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அதை வவுனியா நகரத்திலிருந்து 2 அல்லது 3 கிலோமீற்ரர் துரத்திற்குள் இருகக்வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலே அமையப் பெறவேண்டும் என தீர்மானத்தை எடுப்பது பிரதேச பொருளாதாரஅபிவிருத்தியை ஏற்படுத்திவிடும் எனகருதுவது எந்தளவு பொருத்தமானது என்பதை பொருளாதார நோக்கில் ஆராய்வது இன்றைய தேவையாகும் அவை தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட்டபின்னர் அதுபற்றி கருத்துக்கூறுவது காலம்கடந்த சிந்தனையாகவே இருக்கும் என்பதால் இப்பிரதேச மக்களும் மக்களால் தெரிவு செய்ப்பட்ட மாகாணசபை பிரதிநிதிகளும் மக்களால் தெரிவு செயயப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இதுபற்றி நுணுக்கமாக பரிசீலனை செய்யவேண்டும். இத்திட்டம் வடமாகாண மக்களுக்கேஒழிய வேறுயாருக்குமல்ல என்பதை நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். இதனால் உண்மையில் தாண்டிக்குளத்தில் இதுஅமைவது எந்தளவுக்கு பயனுடையது எந்தளவுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடியது என்பதுபற்றி ஆழமாக சிந்திக்ப்டவேண்டியது அவசியமே பொருளாதார அபிவிருத்திக்கான பொதுமுதலீடு கிடைக்கின்ற இச்சந்தாப்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துவதே சிறந்தது.
தாண்டிக்குளத்தை அண்டியபகுதியில் 140 ஏக்கர் நிலம் 1947ம் ஆண்டிலிருந்து விவசாய விதைஉற்பத்திப் பண்ணையாக பயன்படுத்தப்பட்டுவருவதை யாவரும் அறிவர் அதில் 35 ஏக்கர் நிலப்பரப்பு 1989ல்இருந்து விவசாயக்கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு விவசாயக்கல்லூரி திறம்பட செயற்பட்டுவருவதும் யாவரும் அறிந்ததே இவ்இரண்டும் ஒன்றிணைந்ததான செயற்பாடுகளிநூடாக விவசாயப்பிதேசமான வடமாகாணத்திற்கு நெல்விதைகளை வழங்குவதோடு பாரம்பரிய நெல்இனங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லால் பரீட்சார்தமான புதிய நெல் ;இனங்கள் எமது பிரதேச மண்வளத்திற்கு பொருத்தமானதாகஉள்ளதா என்ற ஆய்வுகளை காலம்காலமாக அவ்வப்போது மேற்கொண்டு விவசாயப ;பெருமக்களுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றது. அவர்களின் இச்சேவைக்கான மதிப்பைபணத்தில் அளவிடுவதாயின் பலஆயிரம் மில்லியனுக்கு சமனானதாகும் எனவே அச்சயெற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுமாயின் நேரடியான மற்றும் மறைமுகமான பலநன்மைகளை இழந்துவிடுவோம். அதுபோலவே எமது பிரதேசத்திற்கென தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரேஒரு விவசாயக்கல்லூரியின் சேவைகளும் பாதிக்கப்படக்கூடாது இவ் விவசாயக் கல்லூரியில் விவசாயப் போதனாசியர்களுக்கான கல்வியும் பயிற்சியும் வழங்கப்படுகிறது எமது மண்ணுக்குப் பொருத்தமான விவசாயப்பயிர்களும் நாற்றுக்களும் விதைகளும் எமது மக்களால் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டுவந்த பழமரங்களை பதுகாப்பது எமது நோக்கமாக இருக்கவேண்டும் உதாரணமாக கறுத்தக் ;கொழும்பான், பாண்டி, செம்பாட்டான,; வெள்ளைக் கொழும்பான், அம்பலவி, கிளிச்சொண்டன், போன்ற அரிய பழமரக்கன்றுகளின் தாய்மரக்கன்றுகளும் அவற்றிலிருந்து வருடாவருடம் பிறப்பாகம் செய்யப்பட்ட ஒட்டுத்தாவரங்களும் எதுவித தொற்று நோய்களலும் பாதிக்படாத சூழலை ஏற்படுத்தவேண்டும் விவசாயக்கல்லூரி இதைப் பாதுகாத்து நீண்டகாலமாக எமக்கு சேவையாற்றி வருவதை புதியதிட்டங்களினூடாக சீரளிக்க்கூடாது இவை ஒருமுறை பாதிக்கப்படுமாயின் இதைமீளக்கட்டி எழுப்புவதென்பது இயலாதகாரியம் இது; பலஆயிரம் மில்லின்செலவிட்டாலும் சாத்தியப்படக்கூடிதொன்றல்ல.
அமையப்போகும் பொருளாதாரவலயம் தாண்டிக்குளத்தில் அமையுமானால் மேற்குறிப்பிட்ட விவசாயப் பண்ணையின் வினைத்திறனான செயற்பாடும் விவசாயக்கல்லூரியின் விலைமதிப்பற்ற சேவையும் பாதிக்கப்படும் குறிப்பாக பொருளாதார வலயத்திற்கென ஒதுக்கபடும் நிலத்தில் மேற்கொளப்போகும் செயற்பாடுகளினால் ஏற்படப்போகும் திண்மக்களிவுகளினால் மாசுபடுத்தப்பட் கழிவுநீர் கழிவுநீர் வாய்க்கால்கள் வாகனக்கழிவுகள் வாகன நெருக்கடிகளால் ஏற்படும் காற்றுமாசடைதல் போன்றவை அருகில ;உள்ள நிலங்களையும் அருகில் செயற்படுத்தப்படும் பொருளாதார நடவடிக்கைகளிலும் மிகப்பெரும்பாதிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் இவற்றின் பெறுமதி பொருளாதாரவலயம் எற்படுத்துவதற்கு செலவிடும் 200 மில்லியன் ரூபாவைவிட அதிகம்.
குறிப்பிட்ட செயற்பாட்டிற்கு எடுக்கப்படும் பொருளாதாரத் தீர்மான்கள் ஏனைய பொருளாதார செயற்பாடுகளுக்கும் ஒத்திசைவானதாக இருக்கவேண்டும் எதிர்காலத்தில் அப்பொருளாதார செயற்பாடு குறித்த பொருளாதார செயற்பாட்டின் விரிவாக்கத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அவசியமானதாகும்.

இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் ஒன்றான மத்தியமாகாணத்தில் பொருளாதாரவலயம் தம்புள்ளையில் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு மத்தியஅரசு கண்டியில்இருந்து 2 கிலோமீற்றருக்குள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதிக்கவில்லை எனக்கருதவேண்டியுள்ளது தம்புள்ளையில் பொருளாதார வலயம் அமைக்கப் பட்டதால்; புதியதொரு நகரம் உருவாகியுள்ளது அத்துடன் பொருளாதார செயற்பாடுகள் புதிய நகரத்துடன் இணைந்ததாக தன்னியல்பாகவே விரிவடைந்து செல்வதால் மறைமுகமாக வேலைவாய்ப்பும் தொழில்துறைகளின் வளர்ச்சியும் தொடர்கின்றது இதுவே அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் போக்கையும் தீர்மானிக்கின்றது இதுபோலவே வடமத்திய மாகாணத்திற்கான பொருளாதாரவலயம் தம்புத்தேகமவில் ஆரம்பிக்கப்பட்டதால் வடமத்தியமாகாணத்தில் உபநகரம் ஒன்று உருவாகி பிரதேச அபிவிருத்திக்கு உதவுகின்றது. இவ்வாறான அனுபவங்களின் பின்னணியில் நேக்கும்போது தாண்டிக்குளத்தில் 5 ஏக்கரில் அமையப்போகும் பொருளாதார வலயம் எதுவித பொருளாதார அபிவிருத்தித் தொலைநேக்கும் இல்லாமல் எடுக்படும் தீர்மானமாகவே இருக்கும். தாண்டிக்குளத்திற்குப்பதிலாக ஓமந்தையில் 35 ஏக்கரைக் கொண்ட மாணிக்கர் வளவில் இப்பொருளாதார வலயம் அமைக்கப்படுவது பொருத்தமானது என்ற வாதம் ஏற்புடையதாகவிருக்கும்.

ஒப்பீட்டுரீதியில் மேட்டு நிலத்தையும் எதிர் காலத்தில் பொருளாதார வலயம் பலதொழில்துறைகளுடன் விவரிக்கப்படக்கூயளவுக்கு நிலத்தையும் புதிய உபநகரத்தின் விரிவாக்கத்திற்கான வாய்ப்புக்களையும் கொண்டதாகவுள்ளது அத்துடன் விவசாயப்பிரதேசமாக இருப்பதால் தொழிலாளர் தேவையை இலகுவாக நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் பொருளாதார அபிவிருத்தி அனுபவங்களின் அடிப்படையில் எல்லா அபிவிருத்யடைந்த பொருளாதாரங்களிலும் விவசாயத்துறையே கைத்தொழில்துறைக்கு மலிவான தொழிலாளரை வழங்கியுள்ளது எனவே எதிர்கால விரிவாக்கத்திற்கு ஓமந்தை பொருத்தமானது இதைவிட போரால்பாதிக்கப்பட்ட கிளிநெச்சி முல்லைத்தீவு மாங்குளம் போன்றவை அரசால்தெரிவு செய்யப்பட்டிருந்தால் இப் பிரதேசங்களின் மீள்எழுச்சிக்கு; மிகப்பொருத்தமாக இருக்கும். ;

தாண்டிக்குளத்தில் இது அமைக்கப்படுமானால் தற்போதுள்ள வவுனியா நகரவிரிவாக்கம் எதிர்காலத்தில் நிலப்பற்றாக்குறைய எதிர்கொள்ளும் என்பதில் எதுவித சந்தேமும் இல்லை அத்துடன் இன்றைய வவுனியாநகரின் வர்த்தக மையமும் அதைநீண்டகாலமாக சிறந்த உச்சப்பயன்பாட்டிற்கு உட்படுத்திய வவுனியாபிரதேசத்தின் வர்தகர்கள் தங்கள் பொருளாதாரவாய்பை இழக்கக்;கூடிய சந்தர்பங்களும் ஏற்படும் புதியபொருளாதார வலயத்தில் உருவாகப்போகும் வர்தகமையத்தில் விற்பனைநிலையங்களின் பங்கீடு புதிய விதிமுறைகளுக்கமைவாக இருப்பதற்கான வாய்ப்பு; இருப்பதால் பாரம்பரியமாக தமக்கிருந்த வாய்புக்களை வவுனியாவர்த்தகர்கள் இழந்துவிடுவர் வேறு பிரதேசத்தவர்களே பொருளாதார வலயத்தில் அதிக நன்மையடைபவர்களாக மாற்றமடைவர்.
இரண்டாவதாக ஏற்கனவே கட்டிஎழுப்பப்பட்ட மைலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை விடுத்து மீன்பிடித் ;துறைமுக நிர்மாணத் திற்கு தெரிவுசெய்யப்பட்ட காரைநகர்ப் பிரதேசமும் வல்வெட்டித்துறை பிரதேசமும் பொருத்தமானதா? மீன்பிடித்துறைமுக நிர்மாணத்தினூடாக மீனவர்பிரச்சினைகள் தீர்க்கப்படுமா எதிர்காலத்தில் அவர்களின் தொழில் வினைத்திறனாக செயற்பட வாய்புள்ளதா? மீனவர்களின் மீள்குடியேற்றத்தை புதிய மீன்பிடித்துறைமுக நிர்மாணத்தினூடாக விரைவுபடுத்தமுடியுமா ?அவர்கள் தமது சொந்தநிலத்தில்இருந்து மகிழ்வோடு மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு 1983 ம் ஆண்டுகளில் பெற்ற வருமானத்தைப் பெற ஆவனசெய்யமுடியுமா? ஏன்பதுபற்றி ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டிய தருணமிது.
வவுனியாவில் பொருளாதார வலயம்,கரரைநகர் மற்றும் வல்வெட்டித்துறையில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும் என வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழிகின்ற வேளையில் எங்கள் மக்களால் தெரிசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளைக் வற்றைக் கவனத்தில் கொண்டு பொருளாதாரவலயம் மற்றும் மீன்பிடித்துறைமுகம் எங்கு அமைக்கப்படவேண்டும் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டும். அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருந்தால் வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பில் விடப்படும் சந்தர்பத்திலாவது இதுபற்றி விவாதித்திருக்கலாம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்போது எம்மக்கள் சார்பாக சிந்தித்திருக்கலாம் எங்கேபோனார்கள் அவ்வேளையில் என்ன செய்தார்கள் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்;.
தேசிய அரசாங்கமேவரவு செலவுத்திட்டத்தைப் போடுகின்றது இதற்கான அமைச்சரே தீர்மானிக்கும் பொறுப்புடையவர் என்று நீங்கள் வாதம் செய்தால் எங்கள் பிரதேசத்தவருக்கு இது எந்த இடத்தில் இருப்பது பொருத்தமானது என்றவகையில் இடத்தைத் தெரிவுசெய்யும் உரிமை இல்லையா? நான் அறிந்த அளவிற்கு பிச்சைகாரனுக்கும் அடிமைக்கும்தான் எதுவித தெரிவு உரிமையும் இல்லை இன்நிலையில்; நாம் ஒன்றை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் வட மாகாணத்தில் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதோ ஒரு வகையைச்சார்ந்தவர்கள் என்று அரசியல்வாதிகள் வெளிப்படையாக குறிப்பிடுவார்களாயின் இதுபற்றி பேசுவதில் எதுவித பயனும் இல்லை என்றமுடிபிற்கு வருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com