சற்று முன்
Home / செய்திகள் / வவுனியாவிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்!

வவுனியாவிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாணம் தழுவிய சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சேவை புறக்கணிப்பு நடவடிக்கைக்கு வவுனியா மாவட்ட சட்டதரணிகளும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதுடன், நேற்றயதினம் நீதிமன்ற நடவடிக்கைளிற்கு சமூகம் அளிக்காத வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனால் வவுனியாமாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com