வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

மானிப்பாய் மற்றும் கோப்பாய் பகுதிகளில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை நேற்று(14) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர் 22வயதுடைய மாம்பழம் சந்தி பகுதியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கபெற் தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை ஆணைக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த மாதம் 28ம் திகதி மானிப்பாய் மெமோறியல் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளையினை மேற்கொண்டவர் இவர் என பொலிஸார் கூறினர். மேலும் குறித்த நபர் கோப்பாய் பகுதிகளிலும் வழிப்பறி சங்கிலி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மல்லாம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com