வல்வெட்டித்துறையில் ஆயுதங்கள் மீட்பு.

வல்வெட்டித்துறை, இலந்தைக் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வயல் கிணற்றிலிருந்து, ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளது.

குறித்த கிணற்றில், ஞாயிற்றுக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 2 கைக்குண்டுகள் மற்றும் 80 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 07 என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பயன்பாடற்றிருந்த இந்த வயல் கிணற்றை, நேற்று துப்பரவு செய்யும் போது, ஆயுதங்கள் இனங்காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் ஆயுதங்களை மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com