வலிவடக்கு மக்களை மாற்று நிலங்களில் குடியமர்த்த அமைச்சரவை தீர்மானம் !

Vale North
தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் வசித்துவரும் ஆயிரத்து 109 குடும்பங்களில் அரசினால் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் வீடுகளை உடைய சுமார் 641 குடும்பங்களினை காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளில் மீளக்குடியமர்த்த நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்மை தமது சொந்த பிரதேசங்களில் குடியமர்த்தினால் மட்டுமே மீளக் குடியமர்வோம் என வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கூறிவரும் நிலையில் அவர்களை அவர்களில் சொந்த நிலங்களிலேயே ஆறு மாத காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்துவேன் என கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது உறுதியளித்திருந்தார். இந்நிலையில் அம்மக்களை மாற்று இடமொன்றில் மீளக் குடியமர்த்த யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணியினை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த இடத்தில் யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் காணப்படுகின்ற 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ள அரசு குறித்த காணியினை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி உடனடியாக மக்களிடம் பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2016 மார்ச் இறுதிவரையில் 251,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இக்குடும்பங்களில் 11,000 குடும்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vali-land-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com