‘வலிமையான பெண்கள் வலிமையான உலக’த்தை வலியுறுத்தி கிழக்கில் நடை பவனி

822c26831270419f41493586f1e0cd6d_lஉலக சிறுமியர் தினத்தை முன்னிட்டு ‘வலிமையான பெண்கள் வலிமையான உலகம்’ எனும் தொனிப் பொருளில் சிறுமிகளின் உரிமைகளை வலியுறுத்தி நடை பவனி இன்று செவ்வாய்கிழமை மட்டககளப்பில் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஆரம்பமான நடைபவனி பிரதான வீதியூடாகச் சென்று செங்கலடி மத்திய கல்லூரியில் நிறைவடைந்தது.

ஒவ்வொரு சிறுமிக்கும் கல்வியைப் பெற சமஉரிமை உண்டு அதனை உறுதி செய்வோம், சிறுமியரின் உரிமைகளைப் பாதுகாப்போம், சிறுமிகள் நாட்டின் பெருமை, வலிமையான பெண்கள் வலிமையான உலகம் போன்ற வாசகங்களைக்கொண்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் மாணவர்கள் நடைபவனியில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், மற்றும் அரசசர்பற்ற அமைப்பின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com