வர்த்தக நடவடிக்கையில் ஏமாற்றப்படுதல் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய பிரிவு

GA District Officeபாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு அதிகாரியான ம.பிரியங்கன், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான ந.சிவரூபன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய வியாபார உலகில் பாவனையாளர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஏமாற்றப்படுதல் மற்றும்; பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கும் விரைவில்; சிறந்த நிவாரணம் மற்றும் தீர்வினை பெற்றுக் கொள்வதற்கும் முறைப்பாட்டு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

முறைப்பாடுகள் :
தொலைபேசி எனின்: 021 321 9000, 077 0139307
மின்னஞ்சல் எனின்: jaffd.caa@gmail.com
நேரடி மற்றும் தபால் மூலம் எனில் : மாவட்ட இணைப்பதிகாரி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்.
எனும் முகவரியூடாக தொடர்புகொள்ளுமாறு பாவனையாளர் அதிகாரசபை யாழ் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பாவனையாளர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன் இவ்வாறு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்படும் என யாழ் மாவட்டம் மேலதிக மாவட்டச்செயலாளர் பா.செந்தில்நந்தனன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com