வர்த்தகர்கள் தங்கள் விருப்பம் போல் முடிவு எடுக்கட்டும் – யாழ் வர்த்தக சங்கம் அவர்களின் முடிவுகளில் தலையிடாது – தலைவர் தெரிவிப்பு ( ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது)

commerceநாங்கள் அறிக்கை விட்டால் பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும். நாங்கள் அறிக்கை விடமாட்டோம். தமிழ்மக்கள் பேரவை பத்திரிகை வாயிலாக கடைகளைப்பூட்டி ஒத்துளைக்குமாறு வர்த்தகர்களிடம் நேரடியாக ஆதரவு கோரியிருக்கிறது. அவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி நடந்துகொள்ளட்டும்  எனத் தெரிவித்துள்ள யாழ் வணிகர் சங்க தலைவர்  நாங்கள் யாரை ஆதரித்து ஒரு அறிக்கையும் விடமாட்டோம். எங்களிற்கு பல வழக்குகள் உள்ளது. இப்போதும் அறிக்கை விடமாட்டோம் எனிமேலும் அறிக்கை விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் சங்கம் எழுகதமிழிற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பிரஸ்தாப்பிக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் அவரது கருத்துக்களை உறுதிப்படுத்தும் பொருட்டு அவரைத் தெடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர் மக்கள் – வர்த்தகர்கள் தங்கள் விருப்பம்போல முடிவெடுத்துக்கொள்ளட்டும் இதில் வர்த்தக சங்கம் தலையிடாது. ஏன் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டபோதுகூட நாம் எந்த அறிக்கையும் விடாமல் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டங்களிற்கு பூரண ஒத்துளைப்பு வழங்கினார்கள்தானே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds