வன்னிப் பல்கலைக்கழகமாகிறது வவுனியா வளாகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் விரைவில் வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் இருபத்தைதாவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் இன்று (17) நடைபெற்றெது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய உயர் கல்வி அமைச்சர் லக்மன் கிரியெல்லா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகமாக மிக விரைவில் தரம் உயர்த்தப்படவுள்ளது என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். வவுனியா வளாக முதல்வர் மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் விக்கினேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com