வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்

இராணுவத்தின் வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். 

மேலும் தெரிவிக்கையில், 
திருகோணமலையில் இரகசிய முகாம் இருபதாக கூறினேன் அது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை, பின்னர் வரணியில் இராணுவ சித்திரவதை முகாம் இருந்ததாக கூறிய போதிலும் அதற்கும் நடவடிக்கை இல்லை. தற்போது வீமன்காமம் பகுதியில் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிட படுகின்றன. அதற்கு வழமை போல் எந்த நடவடிக்கையும் இல்லை. வீமன்காமம் பகுதியில் வதை முகாம் இருந்து இருக்காலம் என சந்தேகிக்க பட்ட வீடுகளில் இருந்த ஆதாரங்களை இராணுவத்தினர் அழித்து உள்ளனர். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும். இவை இதுவரை காலமும் இராணுவத்தினரின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தது தற்போது மக்கள் மீள் குடியேற அனுமதிக்க பட்ட போது அவை வெளியில் வருகின்றன. எனவே வதை முகாம்கள் இருந்ததாக சந்தேகிக்க படுகின்ற இடங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com