வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் எங்கே? சுமந்திரன்

திருகோணமலையில் காணப்பட்ட வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் அனைவரும் எங்கே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வரும் வரவுசெலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய முகாம் ஒன்று இருந்ததையும் அங்கு தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதையும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்புக் குழு உறுதிப்படுத்தியிருந்தது.

அத்துடன் திருகோணமலையில் இப்படியொரு இரகசிய முகாம் ஒன்று இருந்ததாக முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட வேண்டும். முன்னாள் போராளிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் விடுவிக்கப்படும் நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் ஏன் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கின்றது?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்திருக்கிறது. ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கமானது கெட்டவர்களுக்கான நல்லாட்சி அரசாங்கமாகும்.

இந்த அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கும். இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை திருப்தியளிக்கின்றது.

ஆனாலும் ஒரு வருடத்திற்குள் இவ்வளவு திட்டங்களையும் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com