வட மாகாண அவைத் தலைவர் அன்ரனி ஜெயகநாதன் மரணம்

14520338_1770118316580361_2767320987527090840_nவட மாகாண அவைத் தலைவர் அன்ரனி ஜெயகநாதன் இன்று மரணமடைந்தார். முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது நோய் காரணமாக தூக்கி வீசப்பட்ட நிலையில் கடும் விபத்திற்கு உள்ளானார்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்ரனி ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்ரனி ஜெகநாதன் வட மாகாண சபை பிரதி அவைத் தலைவராகவும் செயற்பட்டார். போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காகவும் தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் இவர் குரல் கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds