வட மாகாணத்தில் புதிய அதிபர் நியமனங்கள் இரத்துச் செய்ய நடவடிக்கை

vakeesam-braking-newsவடமாகாணத்தில் புதிய அதிபர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
வடமாகாணத்தில் இருந்து அதிபர் தரம் – 3 போட்டி பரீட்சையில் 398 பேர் சித்தி பெற்றிருந்தனர். அவர்களில் 84 பேருக்கு நேர்முகத்தேர்வின் மூலம் அதிபர் வெற்றிடம் உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கி இருந்தோம். அவர்கள் கடந்த 5 ஆம் திகதி தமது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஆனால் பாடசாலைகள் வழங்கப்படாத மிகுதியாக உள்ள அதிபர்கள் அனைவருக்கும் தமக்கு ஒரே நேரத்தில் நியமனம் வழங்க வேண்டும் எனவும் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, அண்மையில் புதிதாக வழங்கப்பட்ட 84 பேருடைய நியமனங்களையும் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் முதலமைச்ரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 2 ஆவது கடிதத்தில், மத்திய அரசின் சுற்றுநிருபம் வரும் வரை நியமனங்கள் எவையும் வழங்கப்பட வேண்டாம் எனவும் வழங்கப்பட்ட நியமனங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவி;த்தார்.
ஆதிபர் தரம் 3 போட்டிப்பரீட்சையில் வடமாகாணத்திலிருந்து 398 பேர் சித்தியடைந்திருந்தனர். கடந்த மே மாதம் அவர்களுக்குரிய பயிற்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடமை நிறைவேற்று அதிபர் தொடர்பாகவும் தரம் பெற்ற அதிபர் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக புதிய அதிபர்களுக்கான நியமனத்தை இடைநிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடமாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் மேற்குறித்த தரதிலான அதிபர்களில் 84 பேருக்கு அண்மையில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனம் சட்டவலுவற்றதும் எனவும் இது வடமாகாணத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது. நேர்முகத்தேர்வின் அடிப்படையில் 84 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறித்த நியமனங்களை ரத்து செய்து ஒரே நேரத்தில் அனைத்து அதிபர்களுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் புதிய அதிபர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் வராமல் நியாமனம் வழங்குவது தவறு எனவும் இவ்வாறு நியமனங்கள் வழங்குவது எமது சேவைக்காலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். என வடமாகாண முதலமைச்சரிடமும் வடமாகாண கல்வி அமைச்சிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர்; மத்திய கல்வி அமைச்சில் இருந்து நியமன விதிமுறை ஒழுங்குகள் கிடைக்கும் வரை அதிபர் நியமனங்களை வழங்க வேண்டாம் எனவும் வழங்கபப்பட்ட புதிய நியமனங்களை ரத்து செய்யும் படி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கடந்த 5 ஆம்திகதி வழங்கப்பட்ட புதிய அதிபர் நியமனங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com