வட-கிழக்கு இணைப்பிற்கு தெளிவுபடுத்தல் தேவை! – காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரம்

வட-கிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த குரல் எழுப்பும் தரப்புக்கள் முதலில் முஸ்லீம் மக்களிற்கு அது ஏன் முக்கியமானதென்பதை தெளிவுபடுத்த வேண்டுமென காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரம் அழைப்புவிடுத்துள்ளது.
வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த காத்தான்குடி முஸ்லீம் போரம் பிரதிநிதிகள் யாழ்.ஊடக அமையத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியிருந்தனர்.தொடர்ச்சியாக வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலருடனும் அவர்கள் பேச்சுக்களினை நடத்தியிருந்தனர்.
அங்கு கருத்து வெளியிடுகையில் வடக்கு கிழக்கினை இணைப்பது தொடர்பில் முஸ்லீம் சமூகத்திடம் சந்தேகமும் அச்சமும் உள்ளது. வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகிவிடுவோமென்ற சந்தேகமும் அவர்களிடமுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் தரப்பிடம் இல்லாவிடினும் சிவில் சமூகத்தை தெளிவுபடுத்தினால் மட்டுமே முஸ்லீம் மக்களது சந்தேகத்தை நீக்கமுடியும். ஆனால் அது தொடர்பினில் ஒரு சதமேனும் கூட்டமைப்போ அதன் தலைமையோ நடவடிக்கை எடுக்காது வெறுமனே பத்திரிகை அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் பேரவை கூட எழுக தமிழிற்கு ஆட்சேர்க்கத்தான் கூட்டங்களை நடத்துகின்றது.தமிழ் மக்கள் பேரவையிடம் கூட முஸ்லீம் சிவில் சமூகத்திற்கு வழங்க கூடிய பதில் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை.
வடகிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம்களும் புட்டுக்கு தேங்காய்பூ போலவே வாழ்கின்றனர்.வடக்குடன் ஒப்பிடுகையினில் கிழக்கில் நம்பிக்கையீனம் அதிகமாகவுள்ளது. அதனை போக்கினால் மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கிழக்கில் ஆதரவை பெறலாமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவில் வடமாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கமும் காத்தான்குடி முஸ்லீம் போர பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com