வடை போச்சே – நிபந்தனையற்ற ஆதரவும் பதவி பிடிக்கும் போட்டிகளும்

மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவியைப் பெற்று சுகபோகம் அனுபவிக்கத் துடித்த கூட்டமைப்பினரின் முகத்தில் அடித்தற்போல் அப்பதவிகளை யாழில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராதநாதனுக்கு இணைத்தலைவர்களாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்திற்கும் ஜனாதிபதியினால் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்கில் அ. இ. ம காங்கிரஸின் துணைத் தலைவரும் துணை அமைச்சருமான எஸ். எச். அமீர் அலி மட்டக்கப்பு மாவட்டதிற்கான அபிவிருத்திக் குழு தலைவராக நியமனம் பெற்றிருக்கின்றார்.
ஐ. தே. க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எம். மஹ்றூப் திருகோணமலை மாவட்டத்திற்கும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் மன்சூர் அம்பாறை மாவட்டத்திற்கும் நியமனம் பெற்றுள்ளனர்.

 இவ்வாறு மைத்திரிபால அரசு பதவிகளை வழங்கிவிட்டதால் பதவிக் கனவில் மிதந்த கூட்டமைப்பினர் கடும் விசனமடைந்ததாக தெரியவருகிறது.

கூட்டமைப்பு அரசின் பங்காளியாகி எதுவித கூகபோகங்களையும் பெற்றுக்கொள்ளாது என மேடைகளில் முழங்கிவிட்டு பிரதி குழுக்களின் தலைவர் பதவி போன்றவற்றை அரசாக வழங்கியது போல கேட்டுப் பெற்ற இவர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுப் பதவிகள் பெறவும் இரகசிய கூட்டங்கள் நடாத்தி யார் யார் எந்தெந்த மாவட்டத்திற்கு என பட்டியல் தயாரித்து அரசிடம் வழங்கியதாகவும் தெரியவருகிறது.

இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைமைப் பதவி குறித்துத்தான் முக்கியமாக ஆராயப்பட்டதாம். வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களின் குழுத் தலைமைப் பதவிகள் தமக்குத்தான் கிடைக்கும் என்பதுபோல இங்கு தெரிவுகள் இடம்பெற்றன.
எனினும் அவற்றை வாங்கி வைத்துக்கொண்ட மைத்திரி அரசு தம்மை ஏமாற்றிவிட்டதாக கூட்டமைப்பினர் புழுக்கம் அடைந்துள்ளனர். எனினும் இது தொடர்பில் பெரிதாக காட்டிக்கொண்டு ஊடகங்களிற்கு அறிக்கைகள் விடுத்தால் தங்கள் பதவி மோகம் குறித்த முகத்திரைகள் கிழிந்துவிடும் என்பதால் அதுகுறித்து அவர்கள் அலட்டிக்கொள்ளாதவர்கள்போல் காட்டிக்கொண்டு தமது இலக்கு அரசியல் தீர்வு பற்றியது மட்டுமே என கூறிதம்மை தேற்றிவருவதாக தெரியவருகின்றது. 

நல்லிணக்க அடிப்படையிலான ஆதரவு எனவும்பட்ஜெட் உட்பட எல்லாவற்றையும் ஆதரிக்கின்றோம் எனவும் கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் நிலையில் அரசு இவர்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com