வடமாகாண விவசாய அமைச்சர் நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டும்.

       

மல்லாகம் நீதிமன்றில் வடமாகாண விவசாய அமைச்சர் முன்னிலையாகாத நிலையில், அடுத்த தவணையில் வடமாகாண நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் மன்றில் ஆஜார் ஆகி விளக்கமளிக்க வேண்டும். என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு இட்டுள்ளார்.


சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்த பகுதிகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை நீ அப்பகுதியினை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்ட போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.
அந்நிலையில் வியாழக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விவசாய அமைச்சர் மன்றில் முன்னிலை ஆகவில்லை. அமைச்சர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் மன்றில் ஆஜார் ஆனார்.
குறித்த சட்டத்தரணியிடம் நீதவான் குடிநீர் விநியோகம் சீரின்மை தொடர்பில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சட்டத்தரணி, 
குடிநீர் வழங்குவது தொடர்பில் மாகாண விவசாய அமைச்சுக்கு  அதிகாரமில்லை எனவும், மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என கூறினார். 
அதன் போது நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி வழக்கின் வழக்காளர்களுக்கு தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை குடிநீர் வழங்கிக்கொண்டு இருக்கின்றது. இதற்கு இடையூரினை ஏற்படுத்தும் வகையில்,வடக்கு மாகாண சபை ஏன் நிபுணர் குழுவினை நியமித்து அறிக்கை வெளியிட்டது என நீதவான் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் வடமாகாண நிபுணர் குழு தொடர்பில் அடுத்த வழக்கு தவணையின் போது அமைச்சர் நீதிமன்றில் ஆயராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும்,
 மேலும் கழிவொயிலால் பாதிக்கப்பட்ட சுன்னாகம் குடிநீர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பிலான அனைத்து அறிக்கைகளையும் அடுத்த வழக்கின் போது மன்றில் சமர்ப்பிக்குமாறும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.உத்தரவிட்டார்.
அதேவளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வடபிராந்திய செயலர், பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்கள் ஆகியோர், குடிநீர் வழங்குவதற்கு தம்மிடம் போதிய நிதி இல்லை எனவும் மன்றில் தெரிவித்திருந்தனர். 
மேலும் இவ்விடயத்தில் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை எனவும், மத்திய அரசுக்கே அதிகாரம் உண்டெனவும் அமைச்சு சார்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணி மன்றில் கூறியதனை அடுத்து இருதரப்பு சட்டத்தரணிகளிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com