வடமாகாண முதலமைச்சராக போட்டியிட நீதியரசர் ஸ்ரீபவனுக்கு அழைப்பு!

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக பிரதம நீதியரசர் ஸ்ரீபவனை போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சியினருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்கிவிட்டு பிரதம நீதியரசர் ஸ்ரீபவனைநியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நீதியரசர்ஸ்ரீபவனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் சந்தித்து தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கானபதிலை நீதியரசன் ஸ்ரீபவன் தெரிவிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com