வடமாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல்.

 வட மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஆர். இந்திரராஜா மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளபட்டு உள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில்  நடைபெற்ற மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினர் எம்.பீ.நடராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே மாகாண சபை உறுப்பினர் ஆர்.இந்திரராஜா மீது இந்த தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  பண்டாரிகுளம் பகுதியில் வைத்து மாகாண சபை  உறுப்பினர்கள் பயணித்த  மோட்டார் சைக்கிளை இடைமறித்து உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த உறுப்பினர் தற்போது வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com