வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் !

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளர்.

நல்லிணக்க அமைச்சின் செயலாளராக சிவஞானசோதி பணியாற்றிவரும் நிலையில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இவருக்கு மேலதிக செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுகளின் செயலாளராக அவர் பணியாற்றியுள்ளார். வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்பெற்றிருக்காது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் அவர் 20 வருடங்கள் பணியாற்றியதன் அடிப்படையிலேயே இடமாற்றம் வழங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சில வாரங்களுக்கு முன்னர் இடமாற்றம் குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர் தான் இன்னமும் மூன்றுமாத கால அவகாசம் கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com