வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

19 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு எந்தவித நிபந்தனைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com