வடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய உயர்தர பரீட்சையில் 3 சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும் உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக வடமாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் கணிதம் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தாதியராக விரும்புபவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய சங்கத் தலைவர் பாலசிங்கம் சிவயோகம் 0713526234 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் shivajokam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
குறிப்பாக 18 வயது முதல் 28 வயதுடைய தாதிய பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com