வடமாகாணசபை பிரிவினைவாதத்தை தூண்டவில்லை – சி.வி.கே

வடமாகாணசபை பிரிவினைவாதத்தை தூண்டவில்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடக்கு கிழக்குமாகாணங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். எனவே வடக்கு கிழக்கை மீள இணைப்பதில் பிரச்சினை கிடையாது.  எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து சமஸ்டி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ள அவர் சமஸ்டி முறைமையை எவரும் பிழையான வகையில் அர்த்தப்படுத்திவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் அனைத்து மாகாணங்களுக்கும் சம அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்களின் அடிப்படையில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds