வடமாகாணசபை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகஜர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்பிப்பதற்கான மகஜர் ஒன்றிணை வடமாகாணசபை தயாரித்து வருவதாக கூறியிருக்கும் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் அது அங்கீகரிக்கப்பட்டு மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் சமகால நிலமைகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இந்த விடயம் தொடர்பாக குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்சமயம் மகஜரை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், நாளை அந்த குழவின் சந்திப்பும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த மகஜரில் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோரிக்கையாக உள்ளடக்கி மகஜர் தயாரிக்கப்பட்டு முடிந்ததும், 9ம் திகதி நடக்கவுள்ள மாகாணசபையின் அமர்வில் அங்கீகரித்து ஜெனீவா செல்லவுள்ள உறுப்பினர் ஒருவர் ஊடாகவும் நேரடியாகவும் கையளிக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com