வடமாகணத்தில் 640 பேருக்கு நியமனம்.

வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 640 பேருக்கான நியமன கடிதங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கபட்டுள்ளது.
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இன்றைய தினம் காலை நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , கல்வி அமைச்சர் த.குருகுலராஜா , விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் , வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொண்டு நியமனம் பெற்றவர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.
வடமாகாணத்தில் பல திணைக்களங்கள் மற்றும் அமைச்சு மட்ட அலுவலகங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் போட்டிப் பரீட்சைகள் மூலமும் நேர்முகத் தேர்வின் மூலமும் தெரிவு செய்யப்பட்ட 640 பேருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டன.
முகாமைத்துவ உதவியாளர்களாக 190 பேரும், கலாச்சார உத்தியோகத்தர்களாக 11 பேரும், சாரதிகளாக 109 பேரும்  விளையாட்டு உத்தியோகத்தர்கள் 17 பேரும்  அத்துடன் பட்டதாரிப் பயிலுனர்கள் நியமனம் தொடர்பில் 330 பட்டதாரிகள் நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய நியமன கடிதங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com