வடமராட்சி துப்பாக்கிச் சூடு – இரு பொலிசார் கைது – பொலிசாரின் தங்குமிடம் மீது தாக்குதல்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிசார் மூவர் கைது செய்யப்பட்டு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை வடமராட்சிப் பகுதியிலுள்ள பொலிஸ் தங்குமிடம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு. உள்ளிருந்த பொருட்களும் குழு ஒன்றினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முன்னதாக பொலிஸ் வாகனம் ஒன்றும் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com