சற்று முன்
Home / செய்திகள் / வடமராட்சி கிழக்கில் முதியவர் கடத்தல் – இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட நால்வர் கைது

வடமராட்சி கிழக்கில் முதியவர் கடத்தல் – இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட நால்வர் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை க டத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் மடக் கப்பட்டபோது  3 போ் தப்பி சென்றுள்ள நிலையி ல் 4 போ் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்ட பின்னா் பொலிஸாாிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளனா். 
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, 
வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியானை சோ்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவா் ஒருவரை காா் மற்றும் தளபாடங்கள் விற்

பனை செய்யும் வாகனம் ஆகியவற்றில் வந்த 7 போ் கொண்டு கும்பல் கடத்தி சென்றுள்ளது. 
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞா்கள் மற்றும் பொதுமக்க ள் கடத்தல் காரா்களை சுமாா் 10 கிலோ மீற்றா் துாரம் கடத்தி செ ன்று இயக்கச்சி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா். 
இதன்போது சம்பவ இடத்திற்குவந்த பளை பொலிஸாா் விசார ணைகளை மேற்கொண்டபோது கடத்தப்பட்ட முதியவா் தமக்கு பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும் எனவும், அதனா லேயே தாம் கடத்தியதாகும் கடத்தல்காரா்கள் கூறியுள்ளனா். 
இதேவேளை கடத்தல்காரா்கள் தொடா்பில் விசாரணை நடாத்தி யபோது அதில் இருவா் இயக்கச்சி இராணுவ முகாமை சோ்ந்த இராணுவ சிப்பாய்கள் என அடையாளம் காணப்பட்டனா். இந்தச் சம்பவதில் 3 போ் தப்பி சென்றுள்ளனா். 
மிகுதி 4 பேரும்  பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.  இந்த கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள இரு இராணுவ சிப்பாய் களையும் கொழும்பில் இருந்துவந்த பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த ஒருவா் தன்னுடைன் அழைத்துச் சென்று குறித்த முதியரைக்  கடத்தியுள்ளனா். 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com