சற்று முன்
Home / செய்திகள் / வடமராட்சி இளைஞர்கள் ஐவர் பளையில் கைது !! – வானில் குண்டு வைத்து குண்டு எடுத்ததா பொலிஸ் ?

வடமராட்சி இளைஞர்கள் ஐவர் பளையில் கைது !! – வானில் குண்டு வைத்து குண்டு எடுத்ததா பொலிஸ் ?

வற்றாப்பளை அம்மன் ஆலத்திற்குச் சென்ற இளைஞர்களிடம் கைக் குண்டுஇருந்ததாகக் கூறி ஐந்து இளைஞர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்,வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் திருவுக்காகச் வாகனம் ஒன்றில் ஐந்து இளைஞர்கள் சென்றுள்ளனர். பளைப் பகுதியை குறித்த இளைஞர்கள் சென்றடைந்தபோது போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என பொலிஸாரால் அவர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே ஏற்ப்பட்ட வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் வாகனத்தைச் சோதனையிடப் போவதாகக் கூறிய பொலிசார் இளைஞர்களை கீழே இறக்கிவிட்டு வானுக்குள் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் பின்னர் வானில் இருந்து இறங்கிய பொலிஸார் கைக் குண்டு ஒன்றினைக் கொண்டுவந்து இது வானுக்குள் இருந்தது எனக் கூறி குறித்த இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இளைஞர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக பொலிஸாரே குறித்த வானில் குண்டை வைத்து விட்டு அதனை எடுத்ததாக்க கூறி சோடிக்கப்பட்ட பொய்க் குற்றச் சாட்டின் இளைஞர்களைக் கைது செய்யதாக அவ் இளைஞர்களின் குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியவர்களது வீடுளுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com