வடமராட்சியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி – பொலிஸ் வாகனம் மீது கல் வீச்சு

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலம் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com