வடமராட்சிக் கிழக்கில் கடற்படையினர் மீது தாக்குதல்! இருவர் படுகாயம்!

நேற்று(21) மாலை யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோதமாக மண் அகழ்பவர்கள் கடற்படையினரைத் தாக்கியுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, சட்டவிரோதமாக மண் ஏற்றுபவர்களை அச்சுறுத்த கடற்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்மேற்கொண்டதையடுத்து, சட்டவிரோதமாக மண் ஏற்றுபவர்கள் கற்களால் கடற்படையினரைத் தாக்கியுள்ளனர்.இதனால் இரண்டு கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண் அகழ்பவர்களால் கடற்படையின் துப்பாக்கியொன்றும் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று (22) 300 க்கும் அதிகமான கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கடற்படையினர் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு(21) முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

அண்மையில் வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார்  தூப்பாக்கிச் சூடு நடாத்தியதில் இளைஞர் ஒருவர்பலியாகியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com