வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர் கனேடிய அதிகாரிகளுடன் சந்திப்பு.

ஆசிய பசுபிக் அபிவிருத்தி விவகாரங்களுக்கான கனேடிய பணிப்பாளர் குளோரியா வைஸ்மன் அவர்கள் தலைமையிலான கனேடிய தூதுக்குழுவினரை (1-3-2017) அன்றையதினம் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அபிவிருத்திசார்ந்து வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும், தேவைப்பாடுகள் குறித்து இச்சந்திப்பின்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

காணி, வீடமைப்பு, தொழில்வாய்ப்பு, கல்வி போன்ற விடயங்களில் காணப்படுகின்ற பொதுவான பிரச்சினைகள் தேவைப்பாடுகள் குறித்தும், வர்த்தகம், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும், பெண்கள் விவகாரம், சிறுவர்களின் நிலைமைகள், கல்வி நிலைமைகள் குறித்தும் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் ரீதியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக இனமுரண்பாடும், இனப்பாகுபாடும், அதனடியாக எழுகின்ற பாகுபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இனநல்லிணக்கம், நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, ஜனநாயகத்தை உறுதி செயவதற்கான முயற்சிகளிலும் அரசியலமைப்பு மாற்றங்களில் முஸ்லிம் மக்களின் பங்களிப்புகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. வடக்கு மாகாணத்தின் பொதுவான நிலைமைகளை மேம்படுத்துவதற்கு எத்தகைய விடயங்களை முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற விடயங்களும் இக்கலந்துரையாடலின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சார்பில் ஜனாப் எம்.சி ஆரிப், ஜனாப் எம்.டி.எம்.குவைஸ், ஜனாப்.எம்.எம்.எம்.நிபாஹிர், செல்வன் அப்துல்லாஹ், செல்வி நிபியா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com