சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு முதல்வர் உண்மையை மட்டும் பேசுவதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

வடக்கு முதல்வர் உண்மையை மட்டும் பேசுவதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

வடக்கு முதல்வர் உண்மையை மட்டும் பேசுவதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரவிக்கையில்,

தமிழ் மக்களுக்குள்ள பிரச்சனைகள், எமது உரிமைகள், மாகாண சபைக்கு தரப்பட்டுள்ள  அதிகாரங்கள், எமக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பாக அனைத்து விடையங்களிலும் உள்ள உண்மையை மக்களுக்கு  கொண்டு செல்வதில் மிகப்பெரிய அளவில் முதலமைச்சர் பங்காற்றி வருகிறார்.  அவரது பணி புனிதமான பணி அது தொடரும் என நம்புகிறோம். மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட  அதிகாரம் அதனால் பயன் இல்லை என்பது பற்றி முதலமைச்சர் மட்டுமே கதைக்கிறார்.தமிழ் தேசியக் கூட்டமைப்போடு முரண்பட்டு இருக்கக் கூடிய ஒரு சிலர் மாகாண அமைச்சரவையில் உள்ளபோதும் மாகாண சபையில்  அதிகாரம் ஆரம்பப் புள்ளிகூட இல்லை என்றோ அல்லது அதைப் பற்றி ஒன்றுமே கதைப்பதில்லை.

2005ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரே நாம் ஒற்றையாட்சி பற்றிக் கதைக்கின்றோம். அதற்கு முன்னர் எவருமே மாகாண சபைத் தீர்வு பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ பேசவே இல்லை.எனவே இந்த மட்டத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். தமிழ் தேசம் அழிக்கப்படுகிறது. தமிழ் தேசம் என்பது மட்டுமே எமக்கு அங்கீகாரத்தைக் கொடுக்கும்.இந்த விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே சொல்கிறார்.

முதலமைச்சரது கருத்துக்களைக் கொச்சப்படுத்துவதற்காக சிலர், அவருக்கு நிர்வாகம் தெரியாது என்கிறார்கள். வடக்கு மாகாண சபைக்கு வரும் நிதி திரும்பிச் செல்கிறது என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அது அப்பட்டமான பொய்.மாகாண சபைக்கு வரும் நிதியில் மத்திய அரசு விரும்புகின்றவற்றை மட்டுமே செய்ய முடியும். மத்திய அரசு விரும்பாதவற்றைச் செய்வதற்கு நிதி வழங்கப்படாது.வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு சட்டவரைவு ஒன்றைத் தயாரித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு வழங்கியுள்ளார். அந்த சட்டவரைவுக்கு 2 ஆண்டுகளாகியும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஒற்றையாட்சிக்கு உள்பட்ட மாகாண சபை அதிகாரத்தைத் தாண்டி தமிழ் மக்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் கலந்துரையாடலை கொண்டுவரக்கூடிய ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான் முதலமைச்சரின் கொள்கையுடன் இருக்கும் அரசியல் ரீதியாக செய்படுவதற்கு இருக்கும் கட்சியும் எமது கட்சியே அதை முதலமைச்சருக்கும் தெரிவித்திருக்கிறோம் மக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். முதலமைச்சர் எம்முடன் இணைவது தொடர்பில் காலம் தான் பதில் கூறவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com