வடக்கு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் மேல் மட்டத்தினர் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் ஒன்றினைத்து வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்காக முன் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் எனக்கு அறிவித்து உள்ளன.
அந்த உறுப்பினர்கள் தமது கட்சியின் மேல் மட்டத்தினரின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறன செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அறிந்து கொண்டேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds