வடக்கு முதல்வரை அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர்!

நேற்று (2) காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி அரசியல் கைதிகளாகத் தடுத்துவைத்திருக்கும் தமது உறவுகளை விடுதலைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிநேற்று (2) காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையில் அரசியல் கைதிகளின் உறவுகள் முதலமைச்சரை சந்தித்தனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரசியல் கைதிகளின் உறவுகளே மேற்படி சந்திப்பில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் என்னைச் சந்தித்தனர்.

இதனை தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அது ஏற்றுகொள்ளக் கூடிய விடயமாகும். இன்றைய தினம் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறையில் உள்ள தங்கள் உறவினர்கள் தொடர்பான போதிய விபரங்களை என்னிடம் வழங்கவில்லை.

இந்நிலையில் அந்த விபரங்களை அவர்களுடைய சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொண்டு பெறுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

அதேபோல் சிறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக மிக விரைவில் சட்டமா அதிபருடன் பேசுவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றேன்.

இதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அதிக கவனத்தை தொடர்ந்தும் செலுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com