வடக்கு மாகாண சபை இன்று நூறாவது அமர்வில் கூடவுள்ளது!

வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது.

2013ஆம் ஆண்டு இறுதியில் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது.

இதன்படி வடமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி 3 வருடங்கள் 9 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் வடக்கு மாகாண சபையின் 100ஆவது நாள் அமர்வு வடக்கு மாகாண சபை அன்மைக்கால சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com