சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு மாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு !

வடக்கு மாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு !

northern_provincial_council-720x480மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது வடமாகாண சபைக்கு என பிரத்தியோக கீதம் உருவாக்குவது தொடர்பில் சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் கீதம் உருவாக்குவது தொடர்பில் அறிவித்தார்.

அதன் போது மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபைக்கு என இதுவரை பிரத்தியோகமாக கீதம் இயற்றப்படவில்லை. அதனை புதிததாக இயற்றுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதன் முதல் கட்டமாக கீதம் இயற்றுவது தொடர்பில் பத்திரிகையில் விளம்பரம் செய்வது எனவும் அதன் ஊடாக கீதம் இயற்றி வரும் போது அதில் எதனை கீதமாக ஏற்றுக்கொள்வது என சபை பின்னர் தீர்மானிக்கும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com