வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் நாளை பணி புறக்­க­ணிப்பு!

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லைக் கண்­டித்தும் உண்­மை­யான தாக்­கு­த­லா­ளிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யும் நாளை திங்­கள்­கி­ழமை வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் சேவைப் புறக்­க­ணிப்­பில் ஈடு­ப­டு­வர் என்று அறி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியை இலக்கு வைத்த தாக்­கு­தல் நீதித்­துறை மீதான அச்­சு­றுத்­தா­கும். அத­னைத் திட்­ட­மிட்­டுச் செய்­தோரை நீதிக்­கும் முன் நிறுத்­தும் பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உண்டு.

எனவே உண்­மை­யான தாக்­கு­த­லா­ளி­யைக் கைது செய்து நீதி­யின் முன் நிறுத்­தப் பொலி­ஸார் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

அதனை வலி­யு­றுத்தி நாளை திங்­கள்­கி­ழமை வடக்கு மாகா­ணச் சட்­டத்­த­ர­ணி­கள் நீதி­மன்ற வழக்­கு­க­ளில் முன்­னி­லை­யா­க­மாட்­டார்­கள் என்று யாழ்ப்­பா­ணம், வவு­னியா மாவட்ட சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் நேற்­றி­ரவு அறி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com