வடக்கு மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு

Regnoldவட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

அளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

´வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கை ஜீவனோபாயம் மற்றும் வேலையில்லாப் பிரச்சினை என்பன முக்கிய பிரச்சினையாக உள்ளது. மக்கள் சந்திப்பு தினங்களில் வேலை வாய்ப்பினை எதிர்ப்பார்த்து பலர் வருகை தருகின்றனர்.

அவர்களில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், அமைச்சுக்கள் – திணைக்களங்களில் நீண்டகாலம் சுயாதீனமாக வேலை செய்தவர்கள் என பலர் இருக்கின்றனர்.

அவர்களில் பலர் தொடர்ச்சியாக 10, 15 வருடங்கள் சுயாதீனமாக பணியாற்றியுள்ளனர். இதன்போது அவர்களது வயதெல்லை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு அரசாங்க சேவையில் இணைந்துக் கொள்ள முடியாத நிலையில் வயதெல்லை கூடியுள்ளது.

இவ்வாறானவர்கள் தற்போது 35 வயதிற்கும் அதிகமான வயதை ஒத்தவர்களாக இருக்கின்றனர். எமது நாட்டில் அரச சேவைக்கான வயதெலலை 35 ஆகும்.

எனவே இந்த நிலைமையினைக் கருத்திற் கொண்டு, வடக்கு மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லையினை 40 ஆக அதிகரிக்க நான் தீர்மானித்துள்ளேன். இதன்மூலம் துன்பப்படுகின்ற, வேலை வாய்ப்பினை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.´ என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com