வடக்கு மாகாணசபையுடன் இணைந்து அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – பிரதமர் ரணில்

வட மாகாண சபையுடனும் அமைச்சர் டி.எஸ். சுவாமிநாதனுடனும் கலந்துரையாடி வடக்கில் பல்வேறு பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மகாவலி, மொரகஹகந்த மற்றும் மல்வத்து ஓயா போன்ற திட்டங்கள் மூலம் வடமத்திய மாகாணம் மட்டுமன்றி திருகோணமலை, மன்னார் வவுனியா போன்ற மாவட்டங்களின் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் அபிவிருத்தி இடம்பெறும் என்றும் பிரதமர் கூறினார்.
எமது அடுத்த திட்டம் திருகோணமலையை முன்னேற்றுவதே, அங்கு கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான சகல செயற்றிட்டங்களும் அங்கு முன்னெடுக்கப்படும். அத்துடன் அங்கிருந்து அநுராதபுரத்துக்கு புதிய வீதிகள் அமைக்கப்படவிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அனுராதபுரத்தில் ஸ்ரீ மாபோதி மற்றும் தந்திரிமலை மகாநாயக்கத் தேரர்களிடம் நாட்டின் நிலைபேறான யுக அபிவிருத்திச் செயற்றிட்ட அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கையளித்தார். இந்த நிகழ்வின் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மகாநாயக்கத் தேரர்களிடம் மல்வத்து ஓயா பாரிய நீர்ப்பாசனத் திட்டம் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கும், திருகோணமலைக்கும் நேரடி வீதிகள் அமைக்கப்பட்வுள்ளன. அதே போன்று வவுனியா, பரந்தன், மாங்குளம், மன்னார் பிரதேசங்களின் அபிவிருத்தி செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் இதன் போது அங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தின் மூலம் மன்னார் வவுனியா மாவட்டங்களின் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com