வடக்கு மாகாணசபையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் தீர்மானங்கள்

 “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் தீர்மானிக்கப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் தீர்மானம் சம்பந்தமானது” 

01)ஆண்டு புரட்டாதி மாதம் ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இணையனுசரணையுடன் வழங்கப்பட்ட, விசேடமாக பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, அடக்குமுறை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான நில ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் இடம்பெற்றாமை, இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான தீர்மானம் 30/1 ஐ இலங்கை அரசாங்கமானது போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

02)இலங்கை அரசாங்கமானது ஏற்றுக்கொண்டு, ஆங்கீகரித்துள்ளதும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உறுதியளித்துள்ளதுமான அதனுடைய பொறுப்புக்கூறல் செயன்முறையில் பன்னாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

03) இலங்கையால் அதனுடைய சொந்தக் கடப்பாட்டை அமுல்படுத்த விரும்பாத காரணத்தால் இவ்விடையத்தை சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு உட்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேச சமூகத்திடமும் இச்சபையானது கோருகின்றது.

04) உண்மை, நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வின்றி, இலங்கையில் நல்லிணக்கமோ அல்லது அல்லது நிலையான சமாதானமோ சாத்தியமற்றது என இச்சபை கருதுகின்றது.

05) இச் சபையானது இலங்கையிடம் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுகோள் விடுவிக்குமாறும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய இலங்கை மீதான விசாரணை அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக உரோம நியதிச்சட்டத்தை ஏற்புறுதி செய்யுமாறும், தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் கூடியதோர் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருமாறும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசச் சமூகத்திடமும் கோருகின்றது.

06) தமிழ் மக்கள் இலங்கையின் இணைந்த வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அவர்களுடைய பரபுவழித் தாயகத்திற்கு உரித்துடைய ஓர் தேசிய இனம் என்பதையும், சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கமானது ஆகக் குறைந்தது இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட, முழுமையானதும் பூரணமானதுமான கூட்டாட்சி முறைமையை அளித்து அதனை அரசியலமைப்பில் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி அங்கீகரிக்கின்றதுமான நடுநிலையானதோர் அரசியல் தீர்வை வழங்குதல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com