வடக்கு தெற்கு ஊடகவியலாளர்கள் யாழில் சங்கமிப்பு ..

ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் உட்பட தெற்கின் 200 ஊடகவியலாளர்கள் சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து யாழ்தேவியில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு  மாலை  யாழ்ப்பாணத்தை  வந்தடைந்தனர்.
யாழ்ப்பாணம் வந்தடைந்த அக்குழுவினரை யாழ்.ஊடக அமையத்தினர் உள்ளிட்ட  ஊடகவியலாளர்கள் வரவேற்றனர். வரவேற்பின் போது யாழ்.ஊடக  அமையத்தினரால் அமைச்சருக்கு  ஐந்தடி உயர எழுதுகோல் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


இக் குழுவில் பிரதிமைச்சர் கருணாரத்தன பரணவிதான , ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என 200 பேர் வருகை தந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com