வடக்கு கிழக்கு பட்டதாரிகளிற்கு மலையகத்தில் நியமனம் வழங்குவதை சிலர் திட்டமிட்டு தடுக்கிறார்கள்

மலையகத்தில் கல்வி வளர்ச்சி மேலோங்க வேண்டும் இதற்காக உயர் தரத்தில் கற்க கூடிய மாணவர்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தின் பட்டதாரி ஆசிரியர்களை மலையகத்திற்கு வரவழைத்து கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதை கூட சிலர் தடுக்க முயற்சிக்கின்றமை எதிர்கால மலையக கல்வியை பாதிக்கும் ஒரு செயலாக அமைந்து விடும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷண்ன் தெரிவித்தார்.

டயகம கிழக்கு தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்..

ஜக்கிய தேசிய கட்சியின் ஊடாக தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தியாக்கப்பட்டு வருகின்றது. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அபிலாஷைகளை ஜக்கிய தேசிய கட்சி தற்பொழுது பூர்த்தியாக்கி வருகின்றமையை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
பல வருடங்களாக செய்ய முடியாமல் இருந்த அபிவிருத்தி பணிகள் தற்பொழுது துரித கதியில் முன்னெடுக்கப்படுகிறது வடக்கு, கிழக்கிற்கும் மலையகத்திற்கும் ஒரு நல்ல உறவு பாலம் இருக்கின்றது. இந்நிலையில் அங்குள்ளவர்களை மலையகத்திற்கு எடுக்ககூடாது என்பதை சிலர் தெரிவித்து வருகின்றனர். இது கேலி கூத்தான விடயமாகும்.
மீரியாபெத்த மண்சரிவு உட்பட மலையகத்தில் அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து உறவு கொடுத்து வருகின்றனர்.
இந்தவகையில் தமிழ் மக்களுடையே நல்ல உறவுகள் நீடிக்கும்பொழுது சிலரால் இந்நிலையை மாற்றியமைக்க முயற்சித்து வருகின்றனர்.
முன்னால் ஜனாதிபதி அமரர். பிரமதாஸ காலத்தில் நாட்டில் இந்து மக்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க இந்து கலாச்சார அமைச்சு உருவாக்கப்பட்டது.
காலப்போக்கில் அவ் அமைச்சு மாற்றம் பெற்று திணைக்களங்கள் ஊடாக செயல்பட்டாலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் அந்த அமைச்சை ஸ்திரம் படுத்தியுள்ளது.
இவ்வாறாக கலாச்சரம் தொட்டு கல்வி வரை மலையக மக்கள் மட்டுமின்றி நாட்டின ஏனைய தமிழ் மக்களுக்கும் ஜக்கிய தேசிய கட்சியின் ஊடாக இந்த அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com