வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மானிலம் – வடமாகாண சபையின் அரசியலமைப்பு யோசனையில் பரிந்துரை

வட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகளோ பின்வரும் கொள்கை முன்மொழிவுகளை கருத்திற்கொள்ளல் வேண்டும் என இத்தால் முடிவுசெய்கிறோம் –
01. இந்தியாவில் மாநிலங்கள் மொழிரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போல, இலங்கையானது அடிப்படையில் இரண்டு பரந்த மாநிலங்களாக,அதாவது பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் பிரதேசத்தைக் கொண்ட வட மற்றும் கிழக்கு மாகாணம் மற்றும் பெரும்பான்மையாகச் சிங்களம் பேசும் பிரதேசத்தைப் கொண்ட ஏனைய ஏழு மாகாணங்களாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.
02. இவ்விரு பரந்த மொழிரீதியான மாநிலங்களிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும் தமிழ் பேசும் மலையகத் தமிழர்கள் நாட்டின் ஏனைய பகுதியில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
03. சிங்களம் பேசுவோரைக் கொண்ட மாநிலமானது அதனுள்ளே பிரிக்கபடல் வேண்டுமா என்ற கேள்வியானது சிங்கள மக்களால் தீர்க்கப்படல் வேண்டும்.
04. பெருநகருக்குரிய கொழும்புப் பிரதேசமானது தனியானதோர் நிர்வாகத்தைக் கொண்டு நாட்டின் தலைநகர அலகாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
05. மேலே தொடர்ச்சியாக ஒப்பிக்கப்பட்டிருக்கும் வரலாற்றுரீதியான பின்புலம் மற்றும் 1833ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் சமூகத்தால் நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வந்த தனித்துவ தன்மையின் அடிப்படையிலும் அதன் பின்னருங்கூட எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஏனைய சமூகங்களில் ஆதிக்கஞ் செலுத்தவோ அல்லது அவர்களில் தங்கியிருப்பவர்களாக இருக்கும்; வகையில் அவர்களைச் சார்ந்திருக்கவோ இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வதற்கும், ஒற்றையாட்சி முறைக்குரிய அரசாங்கத்துக்குப் பதிலாக கூட்டாட்சி முறைக்குரிய அரசாங்கமொன்றானது சுவீகரிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். இலங்கைப் பிரஜை ஒவ்வொருவரும் சட்டரீதியாக இன்னொருவருக்குக் கீழானவர் என அவனோ அல்லது அவளோ உணர்வதற்குரிய வழிமுறை இல்லை என்பது உறுதிசெய்யப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சமூகங்கள் சட்டரீதியான நிலைப்பாடொன்றில் ஏனையோரிடமிருந்து ஒருவருக்காக அளவுமீறிய பயனைக் கோரக் கூடாது.
06. இலங்கையில் தமிழ் பேசுவோரைக் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களினுள் தற்போதய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைத்தலின் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபையானது காணப்படல் வேண்டும். இத்தன்னாட்சிப் பிராந்தியத்தின் நிலை, பரிமாணம் மற்றும் நீதிநிலைமை ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்படல் வேண்டும். மொழிரீதியிலான தமிழ் பேசும் வடகிழக்கு மாநிலமானது மாநிலப் பாராளுமன்றத்தைக் கொண்டிருக்கும்.
07. மலையகத் தமிழர்களுக்காக அதே போன்ற ஒழுங்குகள் சிங்கள மொழிரீதியான மாநிலத்தினுள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
08. முழு நாட்டினதும் பாராளுமன்றப் பிரதிநதிகள் அதிகாரமானது ஒரு சமூகத்தில் குவிக்கப்படும் அபாயத்தைத் தவிர்த்து அதிகாரங்கள் சகல சமூகங்களுக்கிடையேயும் சமனாகப் பகிரப்படுவதை உறுதிசெய்தல் வேண்டும்.
09. எச்சந்தர்ப்பத்திலும், வடகிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் மலையகத் தமிழ் தன்னாட்சிப் பிரதேசத்தைப் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சிப் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ அல்லது தன்னாட்சிப் பிரதேசங்களாலோ அங்கீகரிக்கப்படாத வரை நடைமுறைக்கு வரக்கூடாது.
10. வடகிழக்கு மாநிலப் பாராளுமன்றம், வடகிழக்கு முஸ்லிம் பிரதேச சபை அதே போல் மலையகத் தமிழ்ப் பிரதேச சபை ஆகியவற்றுக்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும். இப் பாராளுமன்றத்துக்கும் பிரதேச சபைகளுக்கும் போதிய சுயவிதியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். இலங்கையை விடப் பரப்பளவிலும் குடித்தொகையிலும் சிறிய நாடாகிய சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள நாட்டுப்பிரிவு முறைமையானது அவசியமான மாற்றங்களுடன் சுவீகாரம் செய்வதற்காகப் பரிசீலிக்கப்பட முடியும். மத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மாநிலத்தில் கூட்டரசாங்கத்தின் பிரதிநிதி நிர்வாக அதிகாரங்களுக்கு உரித்துடையவராக இருக்க வேண்டிய தேவையில்லை என்பதுடன் அவைமாநிலத்தின் அமைச்சரவையால் முழுமையாக உடைமையாக்கப்படும்,மாநில அரசாங்கமானது ஏதேனும் காரணத்திற்காக அவற்றுக்கு இருப்புடையாதாக இல்லாதபோது, அச்சந்தர்ப்பத்தில் பிரதிநிதியானவர் அவ்வதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு உரித்துடையவராவார்.
11. இலங்கையின் அரசகரும மொழிகள் சிங்களமும் தமிழும் ஆவதுடன் ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் இருத்தல் வேண்டும். வடகிழக்கு மாநிலத்திலுள்ள சகல பதிவுகளும் நடவடிக்கைகளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். அத்துடன் மலையகத் தமிழ் பிரதேச சபையை உள்ளடக்கிய தீவின் மீதிப்பாகத்தில் பேணப்படும் சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு சிங்களத்தில் இருத்தல் வேண்டும்.
12. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குகையில் தொடர்ச்சியாக வந்த மத்திய அரசாங்கங்களால் சுற்றயல் நிர்வாகங்களை வலிதற்றதாக்குவதன் பொருட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆழ்ந்தாய்வு நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.
அவ்வாறான வலிதற்றதாக்குகையானது பின்வரும் சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது
(i) 1979ம் ஆண்டு நிறுவப்பட்ட மகாவலி அதிகாரசபை போன்ற அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரசபைகளின் தொடர்ச்சியானது மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உள்நாட்டு மாகாண அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத மாகாண எல்லைகளையும் புகலிட நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கு அனுமதித்தது.
(ii) 1992ம் ஆண்டின் 58ம் இலக்க அதிகாரங்களை மாற்றியமைக்கும் (பிரதேச செயலர்கள்) சட்டமானது அரச அதிபர்களையும் பிரதேச செயலர்களையும் மாகாண நிர்வாகத்தின் நோக்கெல்லைக்கு அப்பாற்படுத்தி அதன்மூலமாக ஓர் இரட்டை நிர்வாக ஒழுங்கமைப்பினைத் தோற்றுவித்தது.
(iii) மத்திக்கும் அயலுக்குமிடையே ஒருங்கியல்பான நியாயாதிக்கத்தை ஒழுங்குசெய்வதன் மூலமாக மாகாண நிர்வாகத்தை வலிதற்றதாக்கி மத்தியானது அதிகாரம்செலுத்தியது. இதன்பின்னர் ஒருங்கியல்பான நியாயாதிக்கமானது தோற்றுவிக்கப்படக்கூடாது, மாநில மற்றும் கூட்டாட்சிக்குரியதாக மாத்திரம் இருத்தல் வேண்டும்.
13. ஒவ்வொரு மாநில அரசாங்கத்தினதும் தன்னாட்சி பிரதேச அரசாங்கத்தினதும் சுயவிதியானது கூட்டாட்சி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
14. சகல பிரஜைகளுக்கிடையிலும் அவர்களுடைய மொழி, மதம், சாதி, கோட்பாடு அல்லது பிரதேசம் எவ்வாறிருப்பினும் சமத்துவக் கொள்கையானது வலியுறுத்தப்படுவதுடன் அரசியல், நிர்வாக, கல்வி, பொருளாதார மற்றும் தொழில் அடங்கலாக ஏனைய சகல துறைகளிலும் சகல சமூகங்களுக்கும் மதிப்பளிப்பு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அரச சேவையிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுத்தாபனங்களிலும் சகல பிரஜைகளுக்கும் தொழில்வாய்ப்புக்கு சம வாய்ப்புக்கள் உறுதிசெய்யப்படல் வேண்டும்.
15. ஒவ்வொரு மாணவரும் தேசிய மொழிகளிலும் இணைப்பு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
16. குடியரசின் கொடியானது பிரிவுக்குரிய வரையறைகளுடன் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். தேசிய கீதமானது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ அல்லது இரு மொழிகளிலுமோ பாடப்படல் வேண்டும்.
17. தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைப் புத்தகங்களினூடான நிலைபேறான நிகழ்ச்சிநிரலானது இல்லாதொழிக்கப்படல வேண்டும். இலங்கையின் வரலாறானது பிரிவுசார் அல்லது வட்டாரம்சார் கோரிக்கைகளுக்குப் பணிந்திராது, சர்வதேசத் தராதரங்களுக்கு அமைவாக சரியாக வரையப்படல் வேண்டும்.
18. மாநில எல்லைகளுக்குட்பட்ட அரச நிலங்கள் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கும் நோக்கெல்லைக்கும் கீழாக வருதல் வேண்டும். அந்நிலம் அப்பிரிவிலுள்ள மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படவுள்ள போது கூட்டரசாங்கமானது மாநில அரசாங்கத்தின் அல்லது பிரதேச அரசாங்கத்தின் சம்மதம் அல்லது இசைவு இன்றி அந்நிலத்தின் மீது எந்த அதிகாரங்களையும் பிரயோகிக்க முடியாது.
19. மாநில அரசாங்கத்துக்கு முழுமையான பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். பொது முக்கியத்துவம் வாய்ந்த விசேட இடங்களைப் பராமரிப்பதன் பொருட்டு மத்தியால் கூட்டரசுக்குரிய பொலிஸ் ஒழுங்கமைப்படுவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை.
20. தீவிரவாதத் தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டுவரப்படல் வேண்டும்
21. புதிய அரசியலமைப்பு ஒழுங்குகள் இனம், மதம், மொழி, கோட்பாடு, சாதி மற்றும் பாண்பாட்டைச் சார்ந்திராது சகல சமூகங்களுக்கிடையிலும் சமூக அக்கறையை உறுதிசெய்து தனிப்பட்ட பிரஜைகள் சட்டவிதிகளுக்கும் உரிமைகளுக்கும் சுயஉரிமைகளுக்கும் மதிப்பளித்தலை மேம்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தின் நேரான இலட்சியங்களைத் தொடர்தல் வேண்டும்.
22. நவீன கடுங்கண்காணிப்பு முறைகளின் காரணமாக போர் முடிவுற்றமையைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இராணுவப் படைகளை நிலைநிறுத்த வேண்டிய அவசியப்பாடானது தேவைக்கு மிகையானது. முன்னாள் போராளிகளை பொது வாழ்க்கையினுள் மீளக்கொண்டுவருவதன் பொருட்டு படைக்குறைப்பு, படைக்கலைப்பு மற்றும் மீளவொருங்கமைத்தல் (டீடீஆர்) செயன்முறையானது மேற்கொள்ளப்படல் வேண்டும்.
23. அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகப் பணிக்கப்பட்டுள்ள பெரும்பான்மைச் சமூகத்தினரை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள அரசியலமைப்புச் சபையை முழுமையாக்கும் நோக்குடன், தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலைத்திருக்கத்தக்கதுமானதோர் தீர்வை உறுதிசெய்வதன் பொருட்டு, தமிழ் பேசும் மக்களின் தொடர்ச்சியான வரலாற்றுரீதியான வாழிடமாகவுள்ள பிரதேசத்தில் அவர்களின் தனித்துவத்தன்மைக்கு ஏற்றவகையில் அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தலைமைத்துவங்களுக்கும் இடையில் ஓர் ஆரம்ப இணக்கப்பாடானது எய்தப்படல் வேண்டும. இணக்கப்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் சமர்ப்பிப்புக்களின் ஒருதரப்பு வழக்கொழித்தல் எண்ணிக்கையில் பலமான பாராளுமன்றத்தின் சிங்கள அங்கத்தவர்களால் மீளவலியுறுத்தப்படல் வேண்டும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றித் தீர்மானிப்பதற்கு அவர்களின் வரலாற்றுரீதியான வாழிடப் பிரதேசங்களில் பொதுவாக்கெடுப்பு ஒன்றானது நடாத்தடப்படல் சாத்தியப்பட வேண்டும். அவ்வாறானதோர் இணக்கப்பாடானது யூஎன் மற்றும் Æ அல்லது ஏனைய நட்பு நாடுகளால் காப்பீடு செய்யப்படல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com