வடக்கு கிழக்கில் முழு அடைப்பு (படங்கள்)

இலங்கை அரசினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (13) வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களால் ஹர்த்தாலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று வடக்கு-கிழக்கு பூராகவும் வன்முறைகள் அற்ற வகையில் முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களிற்கு முன் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரி முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டபோது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றையதினம் முழு அடைப்பின்போது வன்முறைகள் ஏதும் நிகழாதிருக்க பொலிசார் ரோந்து நடவடிக்கை மற்றும் ஏனைய முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் எதுவித வன்முறைச் சம்பவங்களுமற்று பொது மக்களால் முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds