வடக்கு ஆளுனராக ரெஜினோல் குரே பதவியேற்றார்

வட மாகாண ஆளுனராக ரெஜினோல் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரெஜினோல்ட் குரே, 1994, 2000, 2004, 2010 காலப்பகுதி தேர்தல்களின்போது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் அரசியலில் அங்கம் வகித்து வந்தார். கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராக செயற்றட்டுமிருந்தோடு மேல் மாகாண சபையின் முதலமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

இவர், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநராக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com