சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு ஆளுநர் – முரளியும் இல்லை முரளிதரனும் இல்லை

வடக்கு ஆளுநர் – முரளியும் இல்லை முரளிதரனும் இல்லை

வடமாகாண ஆளுநராக கோத்தபாயவின் இளைஞரணி பிரமுகரான தமிழ் நபர் ஒருவர் நியமிக்கப்படலாமென பரபரப்பு தொற்றியுள்ளது.

முன்னதாக விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன், கருணா எனப்படும் முரளிதரன் ஆகியோரது பெயர்கள் இன்று பரபரப்பாகியிருந்தது.

இதேவேளை வடக்கு ஆளுநர் பதவி தமது கட்சிக்கே தரவேண்டும் என ஜனாதிபதி கோத்தாவிடம் தேர்தலுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்த தமிழ் அரசியல் கட்சிகள் சில தேர்தலில் கோத்தா எதிர்பார்த்த வாக்குகளை வடக்கில் பெற்றுக்கொடுக்காமல் போனமையால் எந்த முகத்தோடு சென்று தமக்கு ஆளுநர் பதவியைத் தருமாறு கேட்பது என குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு ஆளுநர் கதிரைக் கனவில் ஈபிடிபியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா, இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள் உள்ளிட்டவர்கள் கோத்தாவை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே வடக்கு , கிழக்கு , அவற்றுடன் தொடுபரப்பு கொண்டுள்ள வடக்கு மத்தி தவிர்ந்த ஆறு மாகாணங்களுக்கும் புதிய ஆளுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com